உயிரோவியப் படம், காட்சிப் பதிவு முறைகள், விளையாட்டுச் செயலி மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கான மையம்
July 31 , 2021 1507 days 607 0
உயிரோவியப் படம், காட்சிப்பதிவு முறைகள், விளையாட்டுச் செயலிகள் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கான ஒரு சிறப்பு தேசிய மையத்தினை உருவாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய மற்றும் உலகளாவியத் தொழில்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் ஓர் உலகத் தரம் வாய்ந்த திறன் கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்த மையமானது அமைக்கப்பட உள்ளது.
இது மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நிறுவப் பட உள்ளது.