மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் “தானியங்களினால் தானியம்” என்ற உரத் துறை மீதான பசுமைத் தரக் குறியீட்டின் சமீபத்திய அறிக்கையை புது தில்லியில் வெளியிட்டார்.
இந்தப் பசுமைத் தரக் குறியீடானது புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினால் (CSE – Centre for Science and Environment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேர்மறைகள் : எரிசக்திப் பயன்பாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் இந்தியாவின் உரத் துறையானது உலகில் உள்ள துறைகளில் மிகச் சிறந்த ஒன்றாகும்.
குறிப்பிடத்தக்கவை : நீர்ப் பயன்பாடு, நீர் மாசுபாடு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு மீதான பதிவுகள்.
முன்னணியில் உள்ள 3 தொழிற்சாலைகள்
உத்தரப் பிரதேசத்தின் ஜகதீஸ்பூரில் உள்ள இந்தோ கல்ப் உரங்கள் அலகு.
குஜராத்தில் உள்ள KRIBHCO நிறுவனத்தின் ஹசிரா அலகு.
கர்நாடகாவில் உள்ள மங்களூருவின் பனம்பூரில் உள்ள இரசாயனங்கள் மற்றும் உரங்களின் அலகு.
1980 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட CSE ஆனது இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் மீதான ஒரு கொள்கை அமைப்பாக செயல்படுகின்றது.