உரிமம் பெறப்படுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன - உற்பத்தித் துறை
September 15 , 2019 2163 days 668 0
பின்வரும் நான்கு பிரிவுகளைத் தவிர மற்ற பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கட்டாய உரிமங்களைப் பெற வேண்டியதில்லை என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புகையிலையின் சுருட்டுகள் & சிகரெட்டுகள் மற்றும் புகையிலைக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள்
மின்னணு விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
தொழில்துறை வெடிபொருட்கள்
தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள்கள்
மேலும் பாதுகாப்புத் துறையில் உரிமங்கள் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட பிரிவுகளைத் தவிர எந்தவொரு பாகங்கள் அல்லது பொருள்களைத் தயாரிப்பவர் தொழில்துறை / ஆயுத உரிமங்களைப் பெறத் தேவையில்லை.
உரிமங்களின் ஆட்சியை அகற்றுவதற்கும் வணிகத்தை எளிதாக்குவதற்கும் அரசு எடுத்துள்ள முயற்சியின் ஒரு பகுதியாக உற்பத்தியாளர்களுக்கான உரிம விதிகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.