கருணைக்கொலையைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டத்தை உருகுவே நாடானது நிறைவேற்றியதன் மூலம் அவ்வாறு செய்த முதல் கத்தோலிக்க இலத்தீன் அமெரிக்க நாடாக அது மாறியுள்ளது.
இறுதி கட்ட நோயறிதல் அல்லது காத்திருப்பு காலம் தேவையில்லாமல் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கருணைக் கொலை செய்ய இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
கருணைக் கொலையானது சுகாதார நல நிபுணர்களால் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில்மேலும் நோயாளிகள் அதற்கேற்ற மனத் திடம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதோடுஇது இரண்டு மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நோயாளிகள் தாங்களாகவே ஆபத்தான மருந்துகளை உட்கொள்ளும் உதவியுடன் கூடிய தற்கொலை, இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது.