உருமாற்றக்கூடிய போக்குவரத்து மற்றும் சேமிப்பு மீதான தேசியத் திட்டம்
March 12 , 2019 2338 days 694 0
உருமாற்றக்கூடிய போக்குவரத்து மற்றும் மின்கலன் சேமிப்பு மீதான தேசியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தூய்மையான, இணைக்கப்பட்ட, பகிரப்பட்ட, நீடித்த மற்றும் ஒரு முழுமையான போக்குவரத்து முன்னெடுப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியினால் தலைமை தாங்கப்படும் அமைச்சகங்களுக்கிடையேயான இயக்கக் குழுவுடன் கூடிய ஒரு பல்துறைசார் திட்டமாகும்.
இது மின் வாகனங்கள், மின் வாகனப் பொருட்கள் மற்றும் மின்கலன்கள் ஆகியவற்றிற்கு உருமாற்றக்கூடிய போக்குவரத்து மற்றும் படிப்படியான உற்பத்தித் திட்டங்களுக்கான யுக்திகளை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கவும் செய்யும்.