காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு ஒப்பந்தத்தின் உறுப்பினர் நாடுகளின் 24-வது மாநாடானது போலந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடைபெற்றது.
2016-இன் பாரீஸ் உடன்படிக்கையை (Paris Agreement) நடைமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த COP-24 ஆனது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டு இந்தியக் குழுவின் கருத்துருவானது ‘ஒரு உலகம் ஒரு சூரியன் ஒரு கட்டமைப்பு’ (One World One Sun One Grid) என்பதாகும்.
இந்த கருத்துருவானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டிணைவின் முதல் கூடுகையில் இந்தியப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டது ஆகும்.
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் இந்தியாவின் நேர்மறையான காலநிலை நடவடிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இந்தியா தனது கூடாரத்தை அமைத்துக் கொண்டு இருக்கும்.