உறுப்பு தானம் செய்வதற்கான முன்மாதிரி ஆளில்லா விமானம்
September 13 , 2022 1071 days 493 0
மனித உறுப்புகளை வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்வதற்கான இந்தியாவின் முதல் முன்மாதிரி ஆளில்லா விமானம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 17,000-18,000 என்ற அளவில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை இந்தியா மேற்கொள்வதுடன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவும் ஆளில்லா வான்வழி வாகனங்களின் முன்மாதிரியானது MGM ஹெல்த்கேர் நிறுவனத்தினால் இணைந்து உருவாக்கப் பட்டது.
மனித உறுப்புகளை கொண்டுச் செல்லும் இந்த ஆளில்லா விமானங்கள் அதிக பட்சமாக 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.