TNPSC Thervupettagam

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான விதிகளில் மாற்றங்கள்

February 23 , 2023 872 days 412 0
  • இந்தப் புதிய விதிகள் ஆனது உறுப்பு பெறுநர்களுக்காக விதிக்கப்பட்ட 65 வயது என்ற வரம்பினை நீக்குகிறது.
  • இருப்பிடம் தொடர்பான கட்டுப்பாடுகளை அகற்றச் செய்வது என்பது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குச் சரியான நேரத்தில் உறுப்புகள் கிடைக்கப் பெறச் செய்திட மிகவும் அவசியமான மற்றொரு நடவடிக்கையாகும்.
  • இது ஒரே தேசம் ஒரே உறுப்பு தான காத்திருப்புப் பட்டியலை அடைவதை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்.
  • தற்போதைய விதிகளின்படி, எதிர்காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ள நபர்கள், அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் மட்டுமே உறுப்புகளைப் பெறுவதற்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், இதற்காக இதுவரையில் மாநிலங்கள் வசூலித்து வந்த பதிவுக் கட்டணமானது ரத்து செய்யப் பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் உலகில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இந்திய நாட்டில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்