உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான NOTTO அடையாள எண்
April 27 , 2024 449 days 442 0
மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது, குறிப்பாக வெளிநாட்டுக் குடிமக்கள் சம்பந்தப் பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் வணிக ரீதியானப் பரிவர்த்தனைகளை அகற்றுவதற்கான உத்தரவினை வெளியிட்டுள்ளது.
உறுப்பு தானம் செய்யும் உயிருள்ள நபர் அல்லது இறந்த நபர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து நிகழ்வுகளுக்கும், உறுப்பு வழங்குபவர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்கும் ஒரு தனித்துவமான தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (NOTTO) அடையாள எண் ஒதுக்கப்படும்.
இது மருத்துவமனையினால் NOTTO இணையதளத்திலிருந்து (www.notto.mohfw.gov.in) உருவாக்கப் பட வேண்டும்.
இறந்த நபரிடமிருந்து மேற்கொள்ளப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது உறுப்புகளை ஒதுக்குவதைக் கருத்தில் கொள்ள NOTTO-ID கட்டாயமாகும்.
உயிருள்ள நபர்களில் மேற்கொள்ளப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது இந்த அடையாள எண் ஆனது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கூடிய விரைவில் 48 மணி நேரத்திற்குள் உருவாக்கப்படும்.