உறையிடப்பட்ட ஆவணச் சமர்ப்பிப்பு குறித்த உச்சநீதிமன்ற கருத்து
April 14 , 2023 844 days 340 0
இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தலைமையிலான ஒரு அமர்வானது, மத்திய அரசின் "இரகசியமான" ஆவணச் சமர்ப்பிப்பினை ஏற்க முடியாது என்று கூறியது.
ஒரே பதவி நிலை ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பான கருத்து வழங்கலின் போது இது கூறப்பட்டது.
நீதிமன்றத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டியதன் ஒரு அவசியத்தினைத் தலைமை நீதிபதி அவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
உறையிடப்பட்ட ஆவணச் சமர்ப்பிப்பு என்பது நீதிபதிகளால் மட்டுமே ஆய்வு செய்யப் படக்கூடிய வகையில், அரசாங்க அமைப்புகளிடமிருந்துத் தகவல்களை உறையிடப் பட்ட வகையில் கோருகின்ற மற்றும் அதைப் பெறுகின்ற ஒரு நடைமுறை ஆகும்.
முந்தையக் காலங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் சில சமயங்களில் கீழ்நிலை நீதிமன்றங்களும் இந்த நடைமுறையினைப் பின்பற்றியுள்ளன.
இரண்டு வகையான நிகழ்வுகளில் இந்த நடைமுறையினைப் பயன்படுத்தலாம்:
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையுடன் தொடர்புடைய தகவலைப் பெறுவதற்கும்,
அந்தத் தகவல் தனிப்பட்டதாகவோ அல்லது இரகசியமானதாகவோ இருக்கும் பட்சத்தில்.