TNPSC Thervupettagam

உற்பத்திப் பொருள்களை மின் சந்தைப்படுத்துதல் மீதான ஒப்பந்தம்

March 7 , 2020 1919 days 603 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டமானது (DAY-NULM - Deendayal Antyodaya Yojana - National Urban Livelihoods Mission - DAY-NULM) அமேசான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • நாடு முழுவதும் நகர்ப் புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களால் (Self Help Groups - SHGs) தயாரிக்கப்படும் பொருட்களை மின் சந்தைப்படுத்துதலுக்காக இந்த ஒப்பந்தமானது கையெழுத்திடப் பட்டுள்ளது.
  • இந்த ஒத்துழைப்பானது பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான பரந்த வாடிக்கையாளர் தளத்தினை விரிவுபடுத்துதல் மற்றும்
    • நகர்ப் புறங்களில் நீடித்த வாழ்வாதாரங்களை உருவாக்கும் திட்டத்தை வலுப்படுத்தல்.

DAY-NULM பற்றி

  • இது நகர்ப்புற ஏழை மக்களின் வறுமை மற்றும் பாதிப்பைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்.
  • இது ஏழைகளின் வலுவான அடிமட்ட அளவிலான நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், நிலையான அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரங்களில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்