2025 ஆம் ஆண்டில் 193 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத அல்லது வருகையின் போதான நுழைவு இசைவுச் சீட்டு பெறல் அணுகலுடன் சிங்கப்பூர் வலுவான கடவுச் சீட்டினைக் கொண்டுள்ளது.
தென் கொரியா 190 நாடுகளுக்கான அணுகலுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதோடுஜப்பான் 189 நாடுகளுக்கான அணுகலுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
187 நாடுகளுக்கான அணுகலுடன் 13 ஐரோப்பிய நாடுகள் இதில் நான்காவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஆஸ்திரியா, கிரீஸ், நார்வே, போர்ச்சுகல் மற்றும் சுவீடன் போன்ற நடுத்தர அளவிலான ஐரோப்பிய நாடுகள் 186 நாடுகளுக்கான பயணத்தினை அனுமதிக்கின்றன.
இந்தியா 62 நாடுகளுக்கான அணுகலுடன் 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடவுச் சீட்டின் வலிமை, குடிமக்கள் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் அல்லது வருகையின் போதான நுழைவு இசைவுச் சீட்டு பெறல் அணுகலுடன் பயணிக்கக் கூடிய நாடுகளின் எண்ணிக்கையால் மதிப்பிடப்படுகிறது.