உலகக் காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகள் 2025
July 27 , 2025 28 days 71 0
ஜூன் 27 முதல் ஜூலை 06 ஆம் தேதி வரை அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலகக் காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த சர்வதேசப் போட்டியில், தமிழ்நாடு காவல்துறையினர் V. தினேஷ், S. அர்ஜுன், B. ஹரிகிருஷ்ணன், V. சரண்யா மற்றும் K. இளவரசி ஆகியோர் அகில இந்தியக் காவல் அணி சார்பாகப் போட்டியிட்டனர்.
மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என அவர்கள் மொத்தம் 11 பதக்கங்களை வென்றனர்.