உலகக் குத்துச்சண்டை கோப்பையின் இறுதிப் போட்டிகள் 2025 ஆனது உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியை உலகக் குத்துச்சண்டை அமைப்புடன் இணைந்து இந்திய குத்துச் சண்டை கூட்டமைப்பு (BFI) ஏற்பாடு செய்தது.
இந்தியா ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை வென்றது.
2025 ஆம் ஆண்டு உலகக் குத்துச்சண்டை கோப்பை போட்டித் தொடரில் இந்தியா 13 தங்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது என்ற நிலையில்அதைத் தொடர்ந்து இதில் கஜகஸ்தான் 12 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.