‘அறப்பண்பு கொண்ட நாடுகள்’ பட்டியலில், அறக்கட்டளை உதவி அமைப்பினால் (Charities Aid Foundation - CAF) 128 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது.
CAF என்பது உலகெங்கிலும் உள்ள உயிர்களின் வாழ்க்கையையும் சமூகங்களையும் மாற்றுவதற்கு வேண்டி ‘கொடை அளித்தல் பண்பை’ ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
கடந்த பத்தாண்டுகளில் (2009 முதல் 2018 வரை) உலகளவில் 1.3 மில்லியன் மக்களை CAF ஆய்வு செய்துள்ளது. இது உலகக் கொடை அளித்தல் குறியீடாக (World Giving Index - WGI) ஏற்படுத்தப் பட்டுள்ளது.
WGI இன் தரவுகளின் படி, அமெரிக்கா முதலிடத்திலும் மியான்மர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
இந்தக் குறியீட்டில் இலங்கை, நேபாளம் (53), பாகிஸ்தான் (69), மெக்ஸிகோ (73), பிரேசில் (74) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா உள்ளது.