TNPSC Thervupettagam

உலகச் சுகாதாரப் பாதுகாப்புக் குறியீடு 2021

December 14 , 2021 1352 days 738 0
  • 2021 ஆம் ஆண்டு உலகச் சுகாதாரப் பாதுகாப்புக் குறியீடானது இலாப நோக்கமற்ற அமைப்புகளான அணுசக்தி இடர் முன்னெடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டது.
  • இந்தக் குறியீடானது தொற்றுநோய்க் காலம் மற்றும் பெருந்தொற்று காலங்களுக்குத் தயாராகும் நிலையில் 195 நாடுகளின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான செயல்திறன்களை ஒரு விரிவான முறையில் மதிப்பிடுதல் மற்றும் தரப்படுத்துதல் செய்யும் அறிக்கையாகும்.
  • இக்குறியீட்டில் உலகின் ஒட்டுமொத்தச் செயல்திறன் மதிப்பானது 2019 ஆம் ஆண்டிலிருந்த 40.2 என்ற அளவிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 38.9 ஆக (100க்கு) சரிந்தது.
  • இது தொற்று நோய்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் மீது மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியா தனது நிலையில் 0.8 புள்ளிகள் சரிந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • வருங்காலத்தில் உருவாக உள்ள தொற்றுநோய் மற்றும் பெருந்தொற்று வகையிலான அச்சுறுத்தல்களுக்கு உலக நாடுகள் தயாராக இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்