சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFC), ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) ஆகியவை இணைந்து உலகச் சுற்றுச்சூழல் மைய சிறு மானியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் ஒரு நிலையான மேம்பாட்டினை அடையச் செய்வதற்கும் கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கும் வேண்டி தேவையான உள்ளூர்ச் சமூகத்தினரின் திறனை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது உள்ளூர்ச் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டானது இந்தத் திட்டத்தின் 7வது செயல்பாட்டுக் கட்டத்தைக் குறிக்கிறது.
குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இதன் மூலம் மானியங்கள் வழங்கப் படுகின்றன.