இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் (ஆகஸ்ட் 01 முதல் 07 வரை) அனுசரிக்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டிற்கான இந்த வாரத்திற்கான கருத்துரு, “ஆரோக்கியமான புவி கிரகத்திற்காக வேண்டி தாய்ப்பால் ஊட்டலை ஆதரித்தல்” என்பதாகும்.
இத்தினமானது 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இன்னோசென்ட்டி பிரகடனம் (Innocenti Declaration) கையெழுத்திடப் பட்டதைத் தொடர்ந்து, அன்று முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இது உலகத் தாய்ப்பால் ஊட்டல் செயல் கூட்டிணைவு (WABA - World Alliance for Breastfeeding Action), உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
WABA என்பது தாய்ப்பால் ஊட்டலுக்கான தடைகளை ஒழிப்பதற்காக உலக அளவில் பணியாற்றும் மக்கள் குழுவைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.