உலகத் தொலைதொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் – மே 17
May 18 , 2021 1544 days 521 0
இத்தினமானது முதல் சர்வதேச தந்தி உடன்படிக்கை கையெழுத்தான தினத்தையும் சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியமானது நிறுவப்பட்ட தினத்தையும் குறிக்கிறது.
தொலை தொடர்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா. அமைப்பின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்திடவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
மேலும் உலகம் முழுவதும் தகவல் எவ்வாறு பரவுகிறது என்பது மீதான கவனத்தையும் இது செலுத்துகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “சவாலான சமயங்களில் டிஜிட்டல் மாற்றத்தை முடுக்கி விடுதல்” (Accelerating digital transformation in challenging times) என்பதாகும்.