TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீடு – 2025

May 8 , 2025 17 hrs 0 min 31 0
  • இந்த முக்கியமான அறிக்கையானது Reporters Without Borders (எல்லைகளைக் கடந்த பத்திரிக்கையாளர்கள்-RSF) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்பட்டியலில் கடந்த ஆண்டைப் போலவே 2025 ஆம் ஆண்டிலும் நார்வே நாடானது, முன்னணியில் இடம் பெற்றுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து எஸ்டோனியா, நெதர்லாந்து, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்த ஆண்டு எரித்திரியா (180) இப்பட்டியலில் கடைசி இடங்களில் இடம் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து வட கொரியா, சீனா, சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • கடந்த ஆண்டு 159வது இடத்திலிருந்த இந்தியா 2025 ஆம் ஆண்டில் 32.96 என்ற மொத்த மதிப்பெண்ணுடன் 8 இடங்கள் முன்னேறி 151வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் மதிப்பிடப்பட்ட 180 நாடுகளில் சுமார் 160 நாடுகள் ஊடக நிறுவனங்களின் நிதி உறுதித் தன்மை தொடர்பாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றன.
  • தெற்காசிய நாடுகள் அனைத்தும் "மிகவும் மோசமான" ஒரு பத்திரிகைச் சுதந்திரச் சூழ்நிலை கொண்டவையாக வகைப்படுத்தப் பட்டன என்ற ஒரு நிலையில் நேபாளம் "பிரச்சனைக்குரிய சூழலைக் கொண்டவை" என்றும் மாலத்தீவுகள் "கடினமான சூழல் கொண்டவை" என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • மற்ற முக்கியப் பொருளாதாரங்களில், ஜெர்மனி 11வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு 20வது இடத்திலும், பிரான்சு 25வது இடத்திலும், பிரேசில் 63வது இடத்திலும், ஜப்பான் 66வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்