பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல் அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் பறவைகளின் நிலை அறிக்கையானது, 45% வலசை போகும் பறவை இனங்கள் குறைந்து வருவதாகவும், ஒன்பதில் ஒன்று அழிவை எதிர்கொள்வதாகவும் கண்டறிந்து உள்ளது.
இந்த அறிக்கையானது வலசை போகும் பறவைகள் மற்றும் அவை இடம்பெயர்வின் போது பயன்படுத்தும் பாதைகளான வலசைப் பாதைகளை மையமாகக் கொண்ட முதல் பதிப்பாகும்.
ஸ்லெண்டர் பில்டு கர்லூ/மெல்லிய அலகு உள்ளான் பறவை 2025 ஆம் ஆண்டில் அழிந்துபோனது, இது சமீபத்திய நூற்றாண்டுகளில் பிரதான நிலப்பரப்பான யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட முதல் உலகளாவிய பறவை அழிவைக் குறிக்கிறது.
ஆக்கிரமிப்பு இனங்கள், தீவிர விவசாயம், பருவநிலை மாற்றம் மற்றும் நீடிக்க முடியாத வேட்டையாடுதல் ஆகியவை முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
வலசை போகும் பறவைகள் மற்றும் முழு வலசைப் பாதைகள் முழுவதும் உள்ள அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நைரோபி வலசைப் பாதைகள் பிரகடனம் கையெழுத்தானது.