TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரியத் தினம் 2025 - ஏப்ரல் 18

April 27 , 2025 3 days 37 0
  • இந்தத் தினமானது, சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது கலாச்சாரம் மற்றும் இயற்கைப் பாரம்பரியத்திற்கு மிக மதிப்பளிக்கும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது, இந்தப் பாரம்பரியத் தளங்களைப் பாதுகாப்பதற்காக எனப் பணி ஆற்றும் நபர்களையும் குழுக்களையும் ஊக்குவிக்கிறது.
  • இந்தத் தினம் ஆனது 1982 ஆம் ஆண்டில் சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் தொடர்பான சபையினால் (ICOMOS) தொடங்கப் பட்டது.
  • இது 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் நிலவரப் படி, 196 நாடுகளில் 1,223 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
  • இந்தியாவில் 43 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Heritage under Threat from Disasters and Conflicts: Preparedness and Learning from 60 years of ICOMOS Actions" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்