உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் - ஏப்ரல் 23
April 24 , 2022 1176 days 445 0
புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இது 1995 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பினால் ஒரு வருடாந்திர விழாவாக நடத்தப் படுகிறது.
இந்நாளில் இறந்த வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, மெக்சிகோவின் குவாடலஜாரா நகரம் உலகப் புத்தக தலைநகரம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘Read, so you never feel low’ என்பதாகும்.