2021 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தாக்க குறியீட்டுத் தரவரிசையில் இந்திய நாடு இரண்டு இடங்கள் முன்னேறி 46வது இடத்தைப் பெற்றுள்ளது.
இக்குறியீடானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization) வெளியிடப்படுகிறது.
இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு சிறப்புப் பணி நிறுவனமாகும்.
இந்தக் குறியீடானது 132 நாடுகளின் புத்தாக்கத் தரவரிசையின் பலபரிமாண அம்சங்களையும், அதன் பலதரப்பட்ட பகுப்பாய்வினையும் வெளிப்படுத்துவதாகும்.
சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் புத்தாக்கத் தரவரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதோடு அவை கடந்த 3 ஆண்டுகளாக முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளன.
2021 ஆம் ஆண்டில் கொரியக் குடியரசு முதல்முறையாக இக்குறியீட்டின் முதல் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் செயல்திறன்
2021 ஆம் ஆண்டில் இந்தியா புத்தாக்க உள்ளீடுகளைக் காட்டிலும் புத்தாக்க வெளியீடுகளில் சிறந்து செயலாற்றி வருகிறது.
இந்த ஆண்டு புத்தாக்க உள்ளீடுகளில் இந்தியா 57வது இடத்தினைப் பெற்றுள்ளது.
புத்தாக்க வெளியீடுகளில் இந்தியா 45வது இடத்தினைப் பெற்றுள்ளது.
34 குறைவான வருமானமுடைய நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
மத்திய மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.