உலகப் பூர்வகுடி மக்களின் சர்வதேச தினம் - ஆகஸ்ட் 09
August 11 , 2022 1095 days 522 0
1982 ஆம் ஆண்டில் ஜெனீவா நகரில் நடைபெற்ற பூர்வகுடி மக்கள்தொகை பற்றிய முதலாவது ஐக்கிய நாடுகளின் ஒரு செயற்குழுக் கூட்டத்தை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளில் 476 மில்லியனுக்கும் அதிகமாகப் பூர்வகுடி மக்கள் வாழ்வதோடு உலக மக்கள்தொகையில் பூர்வகுடி மக்கள் 6.2 சதவிகிதமாக உள்ளனர்.
1993 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியினை உலகின் பூர்வகுடி மக்களின் சர்வதேச தசாப்தத்தின் தொடக்கமாக அறிவித்தது.
1993 ஆம் ஆண்டானது உலகப் பூர்வகுடி மக்களின் சர்வதேச ஆண்டாகவும் அறிவிக்கப் பட்டது.
இத்தினத்தின் கருத்துரு, “பாரம்பரிய தகவல்களைப் பாதுகாத்து அதனைப் பரப்பச் செய்வதில் பூர்வகுடி பெண்களின் பங்கு" என்பதாகும்.