உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு (GOOS) அறிக்கை
October 5 , 2022 1043 days 760 0
இது நமது உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பின் (GOOS) நிலை, திறன் மற்றும் மதிப்பு பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வறிக்கையினை வழங்குகிறது.
உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு என்பது பெருங்கடல் கண்காணிப்புத் தேவைகளை வரையறுக்கச் செய்யவும், கண்காணிப்பு வலையமைப்புகளை ஒருங்கிணைக்கவும், தரவு மற்றும் முன்னறிவிப்புகளின் பரிமாற்றங்களை உறுதிப் படுத்தவும் உதவும் ஆறு முக்கியக் கூறுகளைக் கொண்ட ஒரு கூட்டுத் தளமாகும்.
உலகப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு என்பது அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையத்தின் (IOC) தலைமையிலான ஒரு திட்டமாகும்.
அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையமானது யுனெஸ்கோ அமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த அறிக்கையின்படி, உலகப் பெருங்கடல்களில் உள்ள கார்பன் செறிவைக் கண்காணிப்பதற்கான அமைப்பானது, கடல்சார் கார்பன் பற்றிய தகவல்களுக்கான வளர்ந்து வரும் மற்றும் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய மிகவும் போதுமானதாக இல்லை.
மனித நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் 40 ஜிகா டன் கார்பனில் 26 சதவீதம் பெருங்கடல்களால் உறிஞ்சப்படுகிறது.