உலகப் பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சாரப் பன்முகத்தன்மை தினம் - மே 21
May 25 , 2024 490 days 304 0
பல்வேறு தேசங்கள், பிரதேசங்கள் மற்றும் மக்கள் ஆகிய பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டி மக்களை ஊக்குவிப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.
2001 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது கலாச்சாரப் பன்முகத்தன்மை குறித்த உலகளாவியப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
இது முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறையானது உலகளவில் 48 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அதில் சுமார் பாதியளவு பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தற்போதுள்ள அனைத்து வேலைவாய்ப்பில் 6.2% மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1% ஆகும்.
30 வயதுக்குட்பட்ட அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்கும் துறையாக இது உள்ளது.