TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2026

October 20 , 2026 2 days 87 0
  • சர்வதேச நாணய நிதியமானது (IMF) அதன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையை வெளியிட்டது, அதில் 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை உயர்த்தியுள்ளது.
  • உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டின் 3.5% உடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் 0.1 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 3.1% ஆக இருக்கும் என கணிக்கப் பட்டு ள்ளது.
  • 2027 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி 3.4% ஆக மாறாமல் உள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பணவீக்கம் 2026 ஆம் ஆண்டில் 4.7% ஐ எட்டும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • ஈரான் போர் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள், எரிசக்தியை இறக்குமதி செய்யும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை அச்சுறுத்துகின்றன, அதே சமயம் செயற்கை நுண்ணறிவில் (AI) முதலீடு செய்வது சில மேம்பட்ட பொருளாதாரங்களில் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
  • மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதியானது 2026 ஆம் ஆண்டில் 0.3% சுருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மேம்பட்ட பொருளாதாரங்கள் 2.1% வளரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்