சிவகங்கை மாவட்டத்தில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதியன்று இலவச மடிக்கணினி வழங்கல் திட்டத்தினைத் தொடங்கியது.
இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் மாணாக்கர்களுக்குப் படிப்படியாக மடிக்கணினி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டத்தில், 10 லட்சம் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப் படுகின்றன.
இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணாக்கர்களையும், 7.5% இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களின் கீழ் தகுதியான தனியார் கல்லூரி மாணாக்கர்களையும் உள்ளடக்கியது.
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை, சட்டம், பல்நுட்பக் கல்லூரி, செவிலியம் மற்றும் தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்கள் (ITI) மாணாக்கர்கள் இதில் அடங்குவர்.