TNPSC Thervupettagam

உலகம் முழுவதும் உள்ள 10 யுனெஸ்கோ உலக பாரம்பரிய குகைகள்

August 28 , 2025 25 days 80 0
  • அமெரிக்காவில் உள்ள 643 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மாமத் குகை தேசியப் பூங்கா உலகின் மிக நீளமான குகை அமைப்பாகும்.
  • அமெரிக்காவில் உள்ள கார்ல்ஸ்பாட் குகை தேசியப் பூங்காவானது, large Big Room chamber என்ற குகை உட்பட 119க்கும் மேற்பட்ட குகைகளைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள எலிஃபாண்டா குகைகள், பண்டைய இந்து மற்றும் புத்த குடைவரை சிற்பங்களைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவில் உள்ள அஜந்தா குகைகளில் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுடன் கூடிய புத்தக் கோவில்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள எல்லோரா குகைகளில் 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான பௌத்தம், இந்து மதம் மற்றும் சமண மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குடை வரைக் கோயில்கள் உள்ளன.
  • ஸ்லோவேனியாவில் உள்ள ஸ்கோக்ஜன் குகைகள் ஆனது ரேகா நதியால் உருவான மிகப்பெரிய நிலத்தடிப் பள்ளத்தாக்குகளில் ஒன்றாகும்.
  • வியட்நாமில் உள்ள போங் நா-கே பேங் தேசியப் பூங்காவில் உலகின் மிகப்பெரிய குகைப் பாதையான ஹாங் சன் டூங் உள்ளது.
  • மலேசியாவில் உள்ள குனுங் முலு தேசியப் பூங்கா மிகப்பெரிய குகைப் பகுதிகளில் ஒன்றான சரவாக் குகைக்கு புகழ் பெற்றது.
  • சீனாவில் உள்ள மொகாவோ குகைகளில் கி.பி 366 ஆம் ஆண்டினைச் சேர்ந்த புத்தக் கலை வடிவங்களுடன் கூடிய 735 குகைகள் உள்ளன.
  • தென்னாப்பிரிக்காவில் உள்ள ஸ்டெர்க்ஃபோன்டைன் குகைகள் மனிதகுலத்தின் தொட்டில் எனப்படும் (Cradle of Humankind) தளத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு  மேலும் இவை மனிதப் பரிணாம ஆய்வுகளுக்கு முக்கியமானவையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்