2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட உலகளாவிய நிதி மையங்கள் குறியீடு (GFCI) 40ல் கிஃப்ட் சிட்டி (GIFT City) உலக அளவில் 37வது இடத்தைப் பிடித்து உள்ளது.
கிஃப்ட் சிட்டி 9 இடங்கள் முன்னேறி 37 வது இடத்தையும், மும்பை 3 இடங்கள் முன்னேறி 49வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் முதல் 15 மையங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நிதி மையம் இதுவாகும்.
ஃபின்டெக் (FinTech) துறையில் கிஃப்ட் சிட்டி 3 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளது.
GFCI 40 ஆனது 144 அளவு அளவீடுகள் மற்றும் 39,531 தொழில்முறை மதிப்பீடுகளைப் பயன்படுத்தி 139 நிதி மையங்களை மதிப்பீடு செய்தது.
இந்தக் குறியீட்டை Z/Yen பார்ட்னர்ஸ் மற்றும் சீனா மேம்பாட்டு நிறுவனம் வெளியிடச் செய்கின்றன; சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) கிஃப்ட் சிட்டியில் நிதிச் சேவைகளை ஒழுங்குபடுத்துகிறது.