136 நாடுகளை மதிப்பீடு செய்த 2025 ஆம் ஆண்டு உலகளாவியப் பட்டினிக் குறியீட்டு (GHI) அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய வேகத்தில் குறைந்தது 56 நாடுகள் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்ச பட்டினி வரம்பை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் 19.0 ஆக இருந்த உலகளாவிய GHI மதிப்பெண் 2025 ஆம் ஆண்டில் 18.3 ஆக உள்ளதுடன் 'மிதமான' என்ற பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
புருண்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, ஹைத்தி, மடகாஸ்கர், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய ஏழு நாடுகளில் பட்டினி நிலையானது 'ஆபத்தான' மட்டத்தில் உள்ளது.
27 நாடுகளில் 2016 ஆம் ஆண்டிலிருந்து பட்டினி நிலை அதிகரித்து வருவதுடன், 35 நாடுகளில் பட்டினி நிலை 'தீவிரமானது' என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
பிஜி, ஜோர்டான், லிபியா, சாலமன் தீவுகள் மற்றும் சிரியா ஆகிய ஐந்து நாடுகள் 2000 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மோசமான GHI மதிப்பெண்களைப் பெற்று உள்ளன.
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு, லைபீரியா, மடகாஸ்கர், கென்யா, சோமாலியா மற்றும் சாம்பியா ஆகிய ஆறு நாடுகள் மிகவும் ஆபத்தான பட்டினி நிலையைக் கொண்டுள்ளன.
தஜிகிஸ்தான், மொசாம்பிக், ருவாண்டா, சோமாலியா, டோகோ மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் பட்டினி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா, வங்காள தேசம், எத்தியோப்பியா, நேபாளம் மற்றும் சியரா லியோனி ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகள் பட்டினி நிலையைக் குறைக்கும் என்பதைக் காட்டுகின்றன.
GHI ஆனது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குறைபாடு, குழந்தை எடை இழப்பு (வயதிற்கேற்ற எடையில்லாமல் இருத்தல்) மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது கன்சர்ன் வேர்ல்டுவைட் (அயர்லாந்து), வெல்துங்கர்ஹில்ஃப் (ஜெர்மனி) மற்றும் சர்வதேச அமைதி மற்றும் ஆயுத மோதல் சட்டம் (IFHV) ஆகியவற்றால் வெளியிடப் படுகிறது.