உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் இந்தியா தனது 131 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தக் குறியீடு 145 பொருளாதாரங்களை உள்ளடக்கியது, இதில் ஐஸ்லாந்து (முதலாவது இடம்), பின்லாந்து (இரண்டாமிடம்) மற்றும் நார்வே (மூன்றாவது இடம்) ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்தியாவின் ஒட்டு மொத்த பாலினச் சமத்துவ மதிப்பெண் 64.5% ஆக இருந்தது, இது உலகளாவிய சராசரியான 69.2% ஐ விடக் குறைவாகும்.
இந்தியாவின் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புக்கான சமத்துவ மதிப்பெண் 41.2% ஆகவும், கல்வி அடைவு 96.6% ஆகவும் இருந்தது.
அரசியல் அதிகாரம் என்பது இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட துணைக் குறியீடாகும், இதில் 24.5% இடைவெளி குறைக்கப்பட்டு உலகளவில் 67வது இடத்தைப் பிடித்துள்ளது.