உலகப் பொருளாதார மன்றத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் இடம்பெற்ற 146 நாடுகளில் இந்தியா 135வது இடத்தைப் பிடித்துள்ளது.
வங்காளதேசம் (71), நேபாளம் (96), இலங்கை (110), மாலத்தீவுகள் (117) மற்றும் பூட்டான் (126) ஆகியவற்றுக்குப் பின்னால் இடம் பெற்று இந்தியா அதன் அண்டை நாடுகளின் மத்தியில் மோசமான தரவரிசையில் உள்ளது.
தெற்காசியாவில் இந்தியாவை விட ஈரான் (143), பாகிஸ்தான் (145), ஆப்கானிஸ்தான் (146) ஆகியவற்றின் மதிப்புகள் மட்டுமே மோசமாக உள்ளது.
பாலினச் சமத்துவத்தை அடைய இன்னமும் 132 ஆண்டுகள் ஆகும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டில், இந்தப் பட்டியலில் இடம்பெற்ற 156 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் இருந்தது.
"சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்தல் திறன்" ஆகியவற்றிற்கான துணைக் குறியீட்டில் இந்தியா 146வது இடத்தினைப் பெற்று மோசமான நிலையில் உள்ளது.
அரசியல் அதிகாரமளிப்பில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும், வங்காளதேசம் 9வது இடத்திலும் உள்ளன.
கல்வித் தகுதிக்கானத்தரவரிசையில் இடம்பெற்ற 146 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
மேலும் இந்தியாவின் மதிப்பெண் ஆனது கடந்த ஆண்டிலிருந்து சற்று மோசமாக உள்ளது.
2021 ஆம் ஆண்டில், 156 நாடுகளில் இந்தியா 114 வது இடத்தைப் பிடித்தது.