TNPSC Thervupettagam

உலகளாவியப் புகையிலைத் தொற்று குறித்த அறிக்கை 2021

August 3 , 2021 1485 days 678 0
  • “உலக சுகாதார அமைப்பினுடைய உலகளாவியப் புகையிலைத் தொற்று குறித்த அறிக்கை 2021: புதிய மற்றும் வளர்ந்து வரும் தயாரிப்புகள் குறித்த கண்காணிப்பு” (WHO report on the global tobacco epidemic 2021: Addressing new and emerging products) எனும் அறிக்கையானது முதல் முறையாக மின்னணு சிகரெட்டுகள் மற்றும் இதர ENDS எனும் பொருட்கள் குறித்த தரவுகளை வழங்கியுள்ளது.
  • ENDS என்பது மின்னணு நிகோட்டின் வழங்கீட்டுப் பொருட்கள் (Electrotic Nicotin Delivery Systems - ENDS) ஆகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியனுக்கும் மேலானவர்கள் புகையிலைக்குப் பலியாகின்றனர் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • இவற்றுள் 7 மில்லியனுக்கும் மேலான உயிரிழப்புகள் நேரடிப் புகையிலைப் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது.
  • சுமார் 1.2 மில்லியன் உயிரிழப்புகள், புகை பிடிப்பவர்களுக்கு அருகிலுள்ள புகைப் பிடிக்கும் பழக்கமில்லாதவர்களுக்கு ஏற்படுகிறது

குறிப்பு

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது மின்னணு சிகரெட்டுகள் மற்றும் இதர ENDS பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.      

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்