துருவப் பகுதிகளுக்கு வெளியே உள்ள உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்ப நிலை ஆனது (SST) 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாதனை அளவை எட்டியது.
60° வடக்கு மற்றும் 60° தெற்கு ஆகியவற்றுக்கு இடையேயான சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 20.96°C ஆக இருந்ததோடு இது 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாத முந்தைய சாதனையான 20.89°C ஐ முறியடித்தது.
பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைகள் வேகமாக வலுவடைந்து வருவதுடன், அதிக பெருங்கடல் வெப்பநிலைக்கு பங்களிக்கின்றன.
16.90°C சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலையுடன், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதமானது உலக அளவில் இரண்டாவது வெப்பமான மாதமாக அமைந்தது.
மேற்கு ஐரோப்பா அதன் வெப்பமான ஜூன்-ஜூலை காலகட்டத்தை வெப்ப அலைகள், வறண்ட நிலைகள் மற்றும் காட்டுத்தீயுடன் பதிவு செய்தது.
மேற்கு ஐரோப்பா மிகக் குறைந்த மேற்பரப்பு மண்ணின் ஈரப்பதத்தையும் பதிவு செய்தது. அதேவேளையில், கனடா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளை வறண்ட காலநிலைகள் பாதித்தன.