உலகளாவியப் போக்குகள் அறிக்கை
June 22 , 2021
1504 days
663
- ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான ஆணையத்தின் சமீபத்திய ஒரு வருடாந்திர அறிக்கையின் படி,
- 82.4 மில்லியன் மக்கள் பலவந்தமாக புலம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
- ஐ.நா.வின் அகதிகளுக்கான ஆணையத்தின் உத்தரவின் கீழ் 20.7 மில்லியன் அகதிகள் (2019 ஆம் ஆண்டில் 20.4 மில்லியன்) உள்ளனர்.
- ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகள் முகமையின் உத்தரவின் கீழ், 5.7 மில்லியன் பாலஸ்தீன அகதிகள் (2019 ஆம் ஆண்டில் 5.6 மில்லியன்) உள்ளனர்.
- உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 48.0 மில்லியன் ஆகும் (2019 ஆம் ஆண்டில் 45.7 மில்லியன்).
- புகலிடம் கோரியவர்கள் – 4.1 மில்லியன் (2019 ஆம் ஆண்டில் 4.1 மில்லியன்) ஆகும்.
- 3.9 மில்லியன் வெனிசுலா நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்த்தப் பட்டனர் (2019 ஆம் ஆண்டில் 3.6 மில்லியன்).
- 2020 ஆம் ஆண்டானது உலகம் முழுவதுமான கட்டாயப் புலம்பெயர்வு தங்கு தடையின்றி உயர்ந்து வரும் ஒன்பதாவது ஆண்டாகும்.
- வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்களுள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலானோர் வெறும் 5 நாடுகளை மட்டுமே சேர்ந்தவராவர்.
- சிரியா (6.7 மில்லியன்)
- வெனிசுலா (4.0 மில்லியன்)
- ஆப்கானிஸ்தான் (2.6 மில்லியன்)
- தெற்கு சூடான் (2.2 மில்லியன்) மற்றும்
- மியான்மர் (1.1 மில்லியன்)
- தொடர்ந்து ஏழாவது ஆண்டாக துருக்கி நாடானது உலகளவில் மிக அதிக அகதிகளுக்கு இடமளித்துள்ளது (3.7 மில்லியன் அகதிகள்).

Post Views:
663