TNPSC Thervupettagam

உலகளாவிய ஃபின்டெக் திருவிழா 2026

September 17 , 2026 4 days 57 0
  • 7வது உலகளாவிய ஃபின்டெக் திருவிழா (GFF) மும்பையில் நடைபெற்றது.
  • GFF 2026-இன் கருத்துரு “Potential to Impact: Agentic Artificial Intelligence (AI), Tokenisation, Quantum” என்பதாகும்.
  • இங்கு விவாதிக்கப்பட்ட மூன்று முக்கிய தொழில்நுட்பங்கள் செயல்பாட்டுத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு, குறியாக்கம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் ஆகும்.
  • இதன் முதன்மை அமைப்பாளர்கள் இந்தியக் கொடுப்பனவு மன்றம் (PCI), இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் ஃபின்டெக் ஒருங்கிணைப்பு மன்றம் (FCC) ஆகியவையாகும்.
  • இந்தத் திருவிழாவிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), நிதிச் சேவைகள் துறை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நிதி ஆயோக் உள்ளிட்ட முகவர் அமைப்புகள் ஆதரவளிக்கின்றன.
  • நம்பகமான, இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதி அமைப்புகளை உருவாக்க வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்த நிகழ்ச்சி நிரல் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்