உலகளாவிய அஞ்சல்ஒன்றியத்தின் (Universal Postal Union - UPU) அரசியலமைப்பில் கூடுதலாக இணைக்கப்பட உள்ள பத்தாவது நெறிமுறைக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
UPU நிறுவனமானது டெலிமாடிக்ஸ் மற்றும் விரைவு அஞ்சல் சேவை கூட்டுறவு அமைப்பையும் மேற்பார்வையிடுகின்றது.
இந்த ஒப்புதலானது இந்தியாவில் UPU அமைப்பு ஒப்பந்தத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கான எந்தவொரு நிர்வாக உத்தரவுகளையும் வெளியிடுவதற்கு அஞ்சல் துறைக்கு உதவ இருக்கின்றது.
UPU பற்றி
இது 1874 ஆம் ஆண்டு பெர்ன் ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் பெர்னில் அமைந்துள்ளது.
UPU ஆனது நிர்வாகச் சபை (காங்கிரஸ்), நிர்வாக மன்றம், அஞ்சலகச் செயல்பாட்டு மன்றம் மற்றும் சர்வதேசப் பணியகம் ஆகிய நான்கு அமைப்புகளைக் கொண்டு உள்ளது.