உலகப் பொருளாதார மன்றமானது 2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அபாயம் என்ற ஒரு அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பெருந்தொற்றுக் காலத்தில், உலகின் முதல் 20% (பணக் காரர்கள்) தங்கள் இழப்புகளை மீட்டெடுத்துள்ளனர்.
மறுபுறம், அடிமட்டத்தில் உள்ள 20% பேர் மேலும் 5% இழந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் அபாயங்கள் நீண்ட காலம் மற்றும் குறுகிய காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும்.
காலநிலை சார்ந்த மீட்பு நடவடிக்கையின் தோல்வி, தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவை அடுத்த தசாப்தத்தில் உலக மக்கள்தொகைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நிபுணர்களால் உணரப் படுகிறது.
மனித சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இயற்கை வள நெருக்கடி போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் இந்தக் காலகட்டத்தில் முதல் 10 இடர்களில் ஒன்றாக இருப்பதாக நம்பப் படுகிறது.
இணையதளப் பாதுகாப்பு, பெருந்தொற்று மற்றும் விண்வெளி முன்னேற்றங்களும் உலகப் பொருளாதாரத்திற்கு அபாயங்களாக விளங்குகின்றன.