TNPSC Thervupettagam

உலகளாவிய அபாய அறிக்கை 2026

January 22 , 2026 4 days 72 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) 2026 ஆம் ஆண்டு உலகளாவிய அபாய அறிக்கையை வெளியிட்டது.
  • இது இணையவெளிப் பாதுகாப்பை இந்தியாவின் மிகப்பெரிய ஆபத்து கொண்டதாகவும், புவிசார் பொருளாதார மோதலை மிகவும் கடுமையான உலகளாவிய அச்சுறுத்தலாகவும் அடையாளம் கண்டுள்ளது.
  • டிஜிட்டல் நிர்வாகம், நிதி தொழில்நுட்பம் மற்றும் முக்கியமான டிஜிட்டல் உள் கட்டமைப்பைச் சார்ந்திருப்பதால் இணையவெளிப் பாதுகாப்பு இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது.
  • புவிசார் பொருளாதார மோதல் என்பது புவிசார் அரசியல் நலன்களுக்காக வர்த்தக கட்டுப்பாடுகள், தடைகள், முதலீட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத் தடைகளைப் பயன்படுத்தும் நாடுகளைக் குறிக்கிறது.
  • இந்தியாவிற்கான பிற முக்கிய ஆபத்துகளில் வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மை, பலவீனமான பொதுச் சேவைகள், பொருளாதார மந்தநிலைகள் மற்றும் அரசு சார்ந்த ஆயுத மோதல்கள் ஆகியவை அடங்கும்.
  • 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய அபாயங்களில் ஆயுத மோதல்கள், தீவிர வானிலை, காலநிலை மாற்றம், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் மற்றும் இணையவெளிப் பாதுகாப்பின்மை ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்