2025 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டினைப் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டில் ஆசியாவின் பாதுகாப்பான நாடாக சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
குறைந்த அளவிலான குற்றம், கடுமையான சட்டங்கள் மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்குப் பெயர் பெற்ற இது அமைதிப் பிரிவில் உலகளவில் 6வது இடத்தைப் பிடித்தது.
2025 ஆம் ஆண்டில் ஆசியாவின் இரண்டாவது பாதுகாப்பான நாடாக இடம் பெற்ற ஜப்பான், ஆசியாவில் ஒட்டு மொத்தமாக 9வது இடத்தையும், உலகளவில் 12வது இடத்தையும் பிடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஆசியாவில் மூன்றாவது பாதுகாப்பான நாடாக இடம் பெற்ற மலேசியா, உலகளவில் 19வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐஸ்லாந்து தொடர்ந்து 18வது ஆண்டாக உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து அயர்லாந்து 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன.
2024 ஆம் ஆண்டிலிருந்த நிலையிலிருந்து மாறாமல் 2025 ஆம் ஆண்டில் இந்தியா உலகளவில் 115வது இடத்தில் உள்ளது,.
பிராந்திய மோதல்கள், உள்நாட்டுப் பதட்டங்கள் மற்றும் நகர்ப்புறக் குற்றம் போன்ற பிரச்சினைகள் அதன் அமைதிக்கான மதிப்பெண்ணைப் பாதிக்கின்றன.
தொடர்ச்சியான போர் ஈடுபாடு மற்றும் இராணுவமயமாக்கல் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் ரஷ்யா முதன்முறையாக உலகின் மிகக் குறைந்த அளவிலான அமைதி நிலவிய நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மோதல்கள் அதன் உள்நாட்டு உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பை பெரிதும் பாதிப்பதால், உக்ரைன் நாடானது உலகளவில் கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
2025 ஆம் ஆண்டு குறியீட்டில் அமெரிக்கா 128வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய அமைதியில் அமெரிக்கா, ஹோண்டுராஸ் (124வது), வங்காள தேசம் (127வது) மற்றும் உகாண்டா (126வது) ஆகியவற்றை விட பின்தங்கி உள்ளது.
2025 ஆம் ஆண்டில் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மிகவும் இராணுவ மயமாக்கப் பட்ட நாடு பிரான்சு ஆகும்.
2025 ஆம் ஆண்டு குறியீட்டில் அமைதியில் ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் கொண்ட ஒரே பிராந்தியம் தென் அமெரிக்கா மட்டுமே ஆகும்.
2025 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதி குறியீடு ஆனது உலகம் முழுவதும் பாதுகாப்பு, சமூக மோதல் மற்றும் இராணுவமயமாக்கல் நிலைகளை மதிப்பிட்டு, 163 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது.
அமைதியில் முதல் இடத்தில் உள்ள ஐஸ்லாந்து, 2025 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளதோடு இது அமைதிக்கும் வாழ்க்கைத் திருப்திக்கும் இடையே வலுவான தொடர்பைக் காட்டுகிறது.