உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு 2022
April 24 , 2022 1170 days 495 0
குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் எனுமிடத்தில் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த மூன்று நாள் அளவிலான மாநாடானது முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும்.
அவர்கள் புத்தாக்க கருத்துகளைப் பற்றி விவாதிக்கவும் இந்திய நாட்டினைத் தொழில் முனைவோருக்கான உலகளாவிய ஆயுஷ் மையமாக எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றி விவாதிக்கவும் இந்த உச்சி மாநாடு உதவும்.