இது ஈரநிலங்கள் தொடர்பான உடன்படிக்கை அதாவது ராம்சர் உடன்படிக்கைக்கான (1971) செயலகத்தினால் வெளியிடப்பட்டது.
ஜூலை 23-31 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேயில் திட்டமிடப்பட்டுள்ள ராம்சர் ஈர நிலங்கள் தொடர்பான உடன்படிக்கையின் (COP15) பங்குதார நாடுகளின் மாநாட்டின் 15வது கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவருகிறது.
இந்தச் சரிவின் பெரும் முக்கிய இயக்கிகளாக நகரமயமாக்கல் மற்றும் தொழில்துறை மேம்பாட்டினை இது எடுத்துக்காட்டுகிறது.
ஆப்பிரிக்காவின் ஈரநிலங்கள் ஆனது உலகளவில் மிகவும் தரமிழந்தவையாகவும், அத்தியாவசிய வளங்களுக்காக மில்லியன் கணக்கானவர்கள் அவற்றை மிக நன்கு சார்ந்திருக்கும் நிலையிலும் உள்ளன.
ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகியப் பகுதிகளில் குறிப்பாக தரமிழப்பின் அளவு அதிகமாக உள்ளது.
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் இதே அதிகரிப்பு பதிவு செய்யப் பட்ட போதிலும் இது நிகழ்ந்துள்ளது.
ஈரநிலங்கள் ஆனது பூமியின் மேற்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கி இருந்தாலும், உலக நாடுகளானது ஆண்டுதோறும் சுமார் 0.52 சதவீத விகிதத்தில் ஈர நிலங்களை இழந்து வருகிறது.
இது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதத்திற்குச் சமமான மதிப்பினைக் கொண்டுள்ளது.
ராம்சர் உடன்படிக்கையின் முக்கிய உத்தி சார் இலக்குகள் குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு (KM-GBF) இலக்குகளுடன் ஒத்துப் போகின்றன.
ராம்சர் என்பது ஈரநிலங்கள் மற்றும் அவற்றின் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் முறையாகப் பயன்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கும் ஒரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாகும்.
இந்தியா 1982 ஆம் ஆண்டில் இந்த உடன்படிக்கையினை அங்கீகரித்தது.