உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான அழைப்புக் கூட்டம்
May 24 , 2022 1302 days 491 0
30 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் "உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான அழைப்பு" என்ற ஒரு கூட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தலைமை தாங்கினார்.
இது விரைவான வளர்ச்சி மற்றும் மனிதாபிமானத் தேவைகளை மதிப்பாய்வு செய்வதையும், உலகளாவிய ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் பின்னடைவு ஆகியவற்றிலுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காண்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தியா முடிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள அதீத விலைவாசி உயர்விற்குச்சரியான தீர்வினைக் கொண்டு வர முடியும்.