உலகளாவிய உணவு இழப்பு மற்றும் உணவுக் கழிவைக் குறைப்பதற்காக ஒரு புதிய தளம்
August 9 , 2020 1922 days 764 0
உணவு மற்றும் வேளாண் அமைப்பானது உலகளாவிய உணவு இழப்பு மற்றும் உணவுக் கழிவைக் குறைப்பதற்கு உதவுவதற்காக ஒரு புதிய தளத்தைத் தொடங்கி உள்ளது.
இந்தத் தளமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப்பட இருக்கும் முதலாவது சர்வதேச உணவு இழப்பு மற்றும் உணவுக் கழிவு விழிப்புணர்வு தினத்தன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
இந்தத் தளமானது உணவின் அளவு, குறைப்பு குறித்த கொள்கைகள், கூட்டிணைவு, செயல்கள் மற்றும் உலக நோய்த் தொற்றுக் காலத்தில் உணவு இழப்பு மற்றும் உணவுக் கழிவுகளை வெற்றிகரமாகக் குறைத்த மாதிரிகளின் உதாரணங்கள் குறித்த தகவல்களைக் கொண்டிருக்கும்.