TNPSC Thervupettagam

உலகளாவிய உருளைக் கிழங்கு மாநாடு

January 29 , 2020 1918 days 735 0
  • உலகளாவிய உருளைக் கிழங்கு மாநாடானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி முதல் முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகின்றது.
  • இந்த மாநாடானது பின்வருவனவற்றுடன் இணைந்து இந்திய உருளைக் கிழங்கு சங்கத்தினால் (Indian Potato Association - IPA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR - Indian Council of Agricultural Research), புது தில்லி,
    • ICAR - மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், சிம்லா மற்றும்
    • சர்வதேச உருளைக் கிழங்கு மையம், லிமா, பெரு.
  • ஹெக்டேருக்கு 30 டன் உற்பத்தித் திறனுடன் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலமானது கடந்த பத்தாண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
  • அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றிற்குப் பிறகு, உருளைக் கிழங்கானது உலகின் மூன்றாவது மிக முக்கியமான உணவுப் பயிராக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்