உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டாண்மை (PGII) திட்டம்
June 30 , 2022 1239 days 572 0
அமெரிக்க அதிபர் பிடன் மற்றும் G7 நாட்டின் தலைவர்கள், உலகளாவிய உள் கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான ஒரு கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.
இது சீனாவின் மண்டலம் மற்றும் சாலைத் திட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாக, வளர்ந்து வரும் நாடுகளுக்கு 600 பில்லியன் டாலர் நிதி திரட்டும் ஒரு திட்டமாகும்.
இந்த உள்கட்டமைப்புத் திட்டமானது முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது.
அப்போது சிறப்பான உலகை மீண்டும் கட்டமைத்தல் என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டமானது 2022 உச்சி மாநாட்டில் புது வடிவம் பெறுவதற்கு முன்பு உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டாண்மைத் திட்டம் என மறுபெயரிடப் பட்டது.