TNPSC Thervupettagam

உலகளாவிய ஓய்வூதியக் குறியீடு 2025

October 25 , 2025 11 days 55 0
  • மெர்சர் CFA நிறுவனத்தின் இந்தக் குறியீடு ஆனது 52 நாடுகளை அவற்றின் ஓய்வூதிய முறைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியது.
  • நெதர்லாந்து 85.4 மதிப்பெண்ணுடனும் ஒட்டு மொத்த A தரவரிசையுடனும் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்தது.
  • இந்தியா 43.8 மதிப்பெண்ணுடனும், இந்தக் குறியீட்டில் மிகக் குறைவான D தர வரிசையுடனும் 52வது இடத்தைப் பிடித்தது.
  • இந்தக் குறியீடு ஓய்வூதிய முறைகளை அதன் போதுமான தன்மை, நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடுகிறது.
  • 80.0 மதிப்பெண்ணுடன் A தரவரிசையை அடைந்த முதல் ஆசிய நாடாக சிங்கப்பூர் மாறியது.
  • இந்தியாவில் நிலவும் குறைந்த பணியாளர் பங்கேற்பு மற்றும் தனித்தனியே மாநிலங்களில் பிரித்து காணப்படும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற சவால்களையும் இந்த அறிக்கை எடுத்துக் காட்டியது.
  • குவைத், நமீபியா, ஓமன் மற்றும் பனாமா போன்ற புதிய நாடுகள் 2025 ஆம் ஆண்டு குறியீட்டில் சேர்க்கப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்