TNPSC Thervupettagam

உலகளாவிய கண்காணிப்புக் குறியீடு - இந்தியாவில் தரவின் தனியுரிமை

October 18 , 2019 2089 days 625 0
  • இங்கிலாந்தில் உள்ள காம்பரிடெக் நிறுவனமானது 47 நாடுகளில் கண்காணிப்பின் தனியுரிமை மற்றும் அதன் நிலை குறித்து மதிப்பிட்டு, உலகளாவிய கண்காணிப்புக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • நாடுகள் பின்வருவனவற்றின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
    • அரசியலமைப்புப் பாதுகாப்பு,
    • தனியுரிமை அமலாக்கம்,
    • பயோமெட்ரிக் தகவல்கள்,
    • தரவுப் பகிர்வு போன்றவை.
  • காம்பரிடெக்கின் உலகளாவிய கணக்கெடுப்பின் படி, உலகின் முதல் மூன்று கண்காணிப்பு நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் நாட்டின் கண்காணிப்புக் கட்டமைப்பு என்று வரும்போது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவானது "தனியுரிமை பாதுகாப்புகளைப் பராமரிக்கும் முறையில் தோல்வி கொண்ட நாடு” என்று அழைக்கப்படுகின்றது.
  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், அயர்லாந்து, பிரான்சு, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்